Showing posts with label தினம் ஒரு திருக்கோயில். Show all posts
Showing posts with label தினம் ஒரு திருக்கோயில். Show all posts

Wednesday, July 17, 2024

🌻மேல்மலையனூர் அங்காளம்மன்கோவில்🌻

 🌻மேல்மலையனூர்
அங்காளம்மன்கோவில்🌻



1. கணவனை பிரிந்து வாழும் பெண்கள் மேல்மலையனூரில் வழிபட உரிய பலன் கிடைக்கும்.

 

2. சில பெண்களை கணவன் அடிக்கடி துன்புறுத்துவது உண்டு. அப்படி பாதிக்கப்படும் பெண்கள் மலையனூர் வந்து அங்காளம்மனிடம் முறையிட பிரச்சினை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 

3.மலையனூர் அங்காளம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான சிறப்பு வாய்ந்தது.

 

4. ஆடி வெள்ளிக்கிழமை அங்காளம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை சாத்தி வழிபட்டால் அம்மன் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாள்.

 

5. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரிக்கு தாண்டேஸ்வரி என்ற பெயரும் உண்டு.

 

6. மலையனூர் புற்று மண்ணை 48 நாட்கள் நெற்றியில் பூசி வந்தால் சகல நன்மைகளும் தேடிவரும் என்பது ஐதீகம்.

 

7. மலையனூர் மண்ணில் காலடி எடுத்து வைத்தாலே போதும், கிரக தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

 

8. மலையனூரில் புற்றில் குடியேறிய அம்பிகையே ஆதிசக்தி என்று போற்றப்படுகிறார். அனைத்து யுகங்களுக்கும் முன்பே அவள் இத்தலத்துக்கு வந்து விட்டதாக ஆன்மீக பெரியோர்கள் கருதுகிறார்கள்.

 

9. அங்காளம்மனை ஆடி மாதம் ஒரு தடவையாவது சென்று வழிபட்டால், பக்தர்களை பிடித்த பீடை, தோஷம், பில்லி, சூனியம், காட்டேரி சேட்டை, ஏவல் போன்றவை தானாக விலகும்.

 

10. மேல்மலையனூருக்கு 3 அமாவாசை தொடர்ந்து வந்து அங்காளம்மனை வழிபட்டு ஊஞ்சல் ஊற்சவத்தை கண்டு வந்தால் குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, திருமண யோகம் ஆகியவை வந்து சேரும்.

 

11. அங்காளம்மனை குல தெய்வமாக கொண்டவர்கள் ஆடி மாதத்தில் ஒருநாள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

 

12. மலையனூரில் அங்காளம்மன் வடக்கு திசை நோக்கி இருந்து அருள்பாலித்து வருகிறார். இதனால் அம்மனின் அருள் பக்தர்களுக்கு அதிகமாக கிடைப்பதாக கூறப்படுகிறது.

 

13. மேல்மலையனூரில் அகோர உருவத்தில் ஆவேசம் அடைந்த அங்காள பரமேஸ்வரி, திருவண்ணாமலை சென்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சாபம் பெற்று, பிறகு மீண்டும் மலையனூர் வந்து அமர்ந்ததாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திரு வண்ணா மலை செல்லும் பக்தர்கள் மலையனூர் வந்து செல்வது நல்லது என்று கூறப்படுகிறது.

 

14. மலையனூர் கருவறையில் வீற்றிருக்கும் அங்காளம்மனை நன்கு உன்னிப்பாக கவனித்தால் அவள் மூதாட்டி வடிவத்தில் இருப்பது தெரியவரும்.

 

15. தக்கனின் யாகத்தை அழிக்க யாகத் தீயில் விழுந்து தன் உடலை அழித்துக் கொண்ட தாட்சாயினியன் அம்சமே அங்காளி என்பதால் மலையனூர் அங்காளம்மன் தலத்தில் சாம்பலைத்தான் பிரசாதமாக தருகிறார்கள்.

 

16. அங்காளம்மனை தொடர்ந்து வழிபட்டால் ராகு-கேது தோஷ பாதிப்பு உங்களை நெருங்கவே நெருங்காது.

 

17. சென்னையில் சூளை, ராயபுரம், சாத்தங்காடு, மைலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை, ஜார்ஜ்டவுன், நுங்கம்பாக்கம் என்று மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அங்காளம்மமன் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

 

18. திருவள்ளூர் அருகே புட்லூர் அங்காளம்மன் கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. அரக்கோணத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

 

19. திருச்சி மாவட்டம் துறையூர் அங்காளம்மன் சயன கோலத்தில் இருப்பதால் அந்த கோவில் மிகவும் விசேஷமானது.

 

20. திருப்பூர் அருகே முத்தளம் பாளையம் என்னும் இடத்தில் வீற்றிருக்கும் அங்காளம்மன் சுயம்புவாகத் தோன்றியவர் என்று கூறப்படுகிறது.

 

21. அங்காளம்மன் ஆலயங் களில் மயானக்கொள்ளை நடக்கும் தினத்தில் அம்மனுக்கு பொங்க லிட்டு பூஜைகள் செய்வது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.

 

22. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல் மலையனூர் வந்து அங்காளம் மனை தரிசித்து செல்கிறார்கள்.

 

23. சமீப காலமாக மேல் மலையனூருக்கு ஆந்திரா, கர் நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

 

24. சென்னையில் இருந்து ஒவ்வொரு அமாவா சைக்கும் மேல் மலையனூருக்கு சுமார் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

 

25. மேல்மலையனூருக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மற்றும் தங்கள்  குடும்பத்தினர் மீதான தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளவே வருகிறார்கள்.

 

26. மேல்மலையனூர் தலத்தில் இரட்டை விநாயகர்கள் உள்ளனர். அவர்களை தரிசித்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 

27. ஆலயத்தின் பின்புறம் அம்மன் பாதம் உள்ளது. நிறைய பக்தர்களுக்கு அதன் விவரம் தெரியாமல் உள்ளது. அங்கு சென்று வழிபட்டால் அம்மனின் கருணை பார்வை உடனடியாக கிடைக்கும் என்கிறார்கள்.

 

28. ஆலயத்தின் முன் பகுதியில் அம்மனின் படுத்துக் கிடக்கும் சிலை உள்ளது-. அந்த அம்மனுக்கு பெரியாயி என்று பெயர். தட்சனின் யாகத்துக்குள் விழுந்து பார்வதிதேவி கலைத் தாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.அதை பிரதிபலிக்கும் வகையில் இந்த அமைப்பு அமைந்துள்ளது.

 

29. பெரியாயி மல்லாந்து படுத்து இருக்கும் மண்டபத்தை சுற்றி 108 விநாயகர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

 

30. ஆலயத்தின் ஒரு பகுதியில் காவல் தெய்வமான பாவாடை ராயன் சன்னதி உள்ளது. அங்கு இன்னமும் அசைவ படையல் போட்டு வணங்குகிறார்கள்.

 

31. மேல்மலையனூர் தலத்தில் தினமும் 2 கால பூஜை நடத்தப் படுகிறது. காலை 5.30 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் அபிஷேக ஆராதனையுடன் இந்த பூஜை நடைபெறும்.

 

32. வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

 

33. மேல்மலையனூர் தலத்தில் மதியம் நடை மூடப்படுவதில்லை. காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை பக்தர்கள் வழிபடலாம்.

 

34. அமாவாசை தினத்தன்று இரவிலும் நடை திறந்திருக்கும். விடிய விடிய பக்தர்கள் அங்காள பரமேஸ்வரியை தரிசனம் செய்யலாம்.

 

35. மேல்மலையனூர் தலத்தில் திருஷ்டி கழிக்கும் பழக்கம் ஆதிகாலத்தில் இருந்தது கிடையாது. கடந்த 25 ஆண்டுகளுக்குள்தான் இந்த பழக்கம் உருவாகி இருக்கிறது.

 

36. எலுமிச்சை பழத்தை இத்தலத்தில் நிறைய பக்தர்கள் காலில் மிதித்து அவமரியாதை செய்கிறார்கள். அது புண்ணியத்தை சேர்ப்பதில்லை. பாவத்தைத்தான் தரும்.

 

37. எலுமிச்சை பழத்தை கோவில் வாசலில் வைத்து தலையை சுற்றி போட வேண்டும் என்று எந்தவித ஐதீகமும் கிடையாது. ஆனால் பக்தர்கள் ஒருவரை பார்த்து ஒருவர் செய்கிறார்கள். கோவிலுக்கும் இந்த பழக்கத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

 

38. அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின்போது சிலர் எலுமிச்சை பழத்தை அம்மன் சிலையை நோக்கி வீசு கிறார்கள். இதை தவிர்க்கும்படி பக்தர்களுக்கு ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

39. இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்பட உள்ளன.

 

40. பக்தர்கள் எளிதாக வழிபடுவதற்காக இத்தலத்தில் 5 வகை வரிசைகளை ஏற்படுத்தி உள்ளனர். அதில் இலவச தரிசன வகை ஒன்று. மற்றப்படி ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 ஆகிய 4 விதமான கட்டணம் செலுத்தியும் அம்மனை வழிபடலாம்.

 

41. சிவபெருமானுக்கும், சக்தி தேவிக்கும் பித்தம் தெளிந்ததால் அந்த ஐதீக அடிப்படையில் இத்தலத்துக்கு வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நலம் பெறுகிறார்கள்.

 

42. மேல் மலையனூரில் மலையே கிடையாது. என்றாலும் மலையரசியான பார்வதி இத்தலத்தில் உறைந்ததால் மலையனூர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

 

43. அங்காள பரமேஸ்வரி என்ற பெயர் உருவானதற்கு பலவித காரணங்கள் சொல்லப்படுகின்றன. பரமேசுவரனின் அங்கத்தின் இடது பாகத்தை ஆள வரம் கேட்டதால் பரமேஸ்வரிக்கு அங்காளபரமேஸ்வரி என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு வரலாறு உண்டு.

 

44. அன்னையின் அருள் பெற்ற வால்மீகி முனிவர் மலையனூரில் மோட்ச பதவி அடைந்தார்.

 

45. ஆதி காலத்தில் மலை யனூர் பகுதி ருத்ர ஆரண்யம் என்றழைக் கப்பட்டது. அது சக்தி பீடமானதும், ருத்ர சக்தி பீடம் என்று மாறியது. அதனால் அங்காளம்மனுக்கு பூங்கா வனத்தாள் என்ற பெயரும் உண்டு.

 

46.அம் + காளம் + அம்மன் = அங்காளம்மன் எனப்படுகிறது. அம் என்றால் உள்ளே, காளம் என்றால் விஷம் என்று அர்த்தமாகும். உள்ளே விஷம் கொண்ட நாகம். நாக வடிவில் அம்மன் புற்றுக்குள் இருப்பதால் இத்தலத்து அம்மன் அங்காளம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

 

47. விருதுநகர் மாவட்டம் மாந்தோப்பு என்னும் இடத்திலும் அங்காளம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

 

48. இக்கோவிலின் தல விருட்சமாக மயில் கொன்றை என்று அழைக்கப்படும் வாகை மரம் உள்ளது. இந்த மரத்தில் குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் காட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

 

49. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் தாலிக்கயிறை இந்த மரத்தில் கட்டினால் உடனடியாக அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது இன்றளவும் ஐதீகமாக உள்ளது.

 

50. அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் முகவரி: மேல்மலையனூர்-604 204, விழுப்புரம் மாவட்டம்.✍🏼🌹

Tuesday, May 28, 2024

பவள மல்லி மரம் தல விருட்சமாக உள்ள கூறைநாடு புனுகீஸ்வரர் சிவன் கோவில் பற்றிய சிறப்பு பதிவு

 பவள மல்லி மரம் தல விருட்சமாக உள்ள கூறைநாடு புனுகீஸ்வரர்
சிவன் கோவில்
பற்றிய சிறப்பு பதிவு


பவளமல்லி பூவின் சிறப்புகள்:


பவளமல்லிகை புஷ்பம் ஒரு தெய்வீக மலராகக் கருதப்படுகிறது.

தேவலோகத்தில் உள்ள
ஐந்து புனிதமான மரங்களில் பவளமல்லிமரமும் ஒன்று
என புராணங்கள் கூறுகிறது.

பவளமல்லி பார்ப்பதற்கு மிக அழகானதும், நறுமணம் மிகுந்ததுமான அபூர்வமான மலராகும்.

இது சவுகந்தியா என்ற ஆபரணத்தை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.

பவளமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம் ஆகும் .

இலக்கியத்தில் சேடல் என்று அழைக்கப்படுகிறது.

புட்ப விதி என்னும் நூலில் பவள மல்லிகையை சண்பக‘ஞாழல் கோட்டூப்பூவகை’ என்று கூறப்பட்டுள்ளது.

பவள மல்லிகை பூஜைக்கு உரிய மலராகும்

அதாவது, நாற்பது வகையான கோட்டூப் பூ வகைகளில் பவளமல்லியும் ஒன்று.

இந்த மரம் முன்னிரவில் பூத்து மணம் வீசி சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும்.

பொதுவாக இந்த மரம் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பூத்துக் குலுங்கும்.

இறைவனின் பூஜைக்குரிய மலர்கள் அனைத்தும் செடிகளில் இருந்துதான் பறிக்கப்படும்.

பொதுவாக மண்ணில் உதிர்ந்து கிடக்கும் பூக்களை பூஜைக்கு பயன்படுத்தமாட்டார்கள்.

ஆனால், இதற்கு பவள மல்லி விதிவிலக்காக உள்ளது.

இது இரவில் பூத்து அதிகாலையில் உதிர்வதால் அப்படி உதிர்ந்த பவளமல்லிப் பூக்களை சேகரித்துத் தொடுத்து இறைவனுக்கு பயன்படுத்துவார்கள்.

பவளமல்லிமரம் மூன்று இலை தொகுப்புகளைக் கொண்டது.

இவற்றில் மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம்.

மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பப்படுகிறது.

பவளமல்லி சிறு மரமாகக் காணப்படுகிறது.

இந்தியா முழுவதும் பரவலாக பவளமல்லியை பார்க்கலாம்.

1500 அடி உயரம் வரையுள்ள இடங்களில் வளரக்கூடியது. 

சுமார் 15 அடி உயரம்வரை வளரும்.

தண்டுபாகம் நான்கு பட்டைகளை உடையது. இலைகள் சற்றுநீண்டு முட்டைவடிவில் சொரசொரப்புடன் இருக்கும்.

பூக்கள் எட்டு இதழ்களுடன் வெண்மையாகவும், காம்பு பவள (சிவப்பு) நிறத்திலும் பார்ப்பதற்கு அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும்.

இதன் கனிகள் வட்டவடிவில் உறை அமைப்பில் இருக்கும்.

செடியில் இருந்து உதிரும்போது இருபகுதியாக பிரிந்து விழும்.

அதில் ஒவ்வொரு பாகத்திலும் சிறியவிதை இருக்கும்.

அந்த விதையை எடுத்து தொட்டிகளில் ஊன்றி புதிய செடியை உருவாக்கலாம்.

சூரியனை பார்த்து மலராத பவளமல்லி புஷ்பத்தின் காரணத்தை உணர்த்தும் புராணக் கதை!

இந்த அற்புதச் செடியைப்பற்றி வாயு புராணம் இவ்வாறு தெரிவிக்கிறது.

பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாள்.

ஆனால், சூரியன் இளவரசியை ஏற்கவில்லை.

இதனால் பாரிஜாதம் மனம் உடைந்து தீயில் குதித்து தனது இன்னுயிரை விடுத்தாள்.

இளவரசி பாரிஜாதம் தீயில் எரிந்த சாம்பலில் இருந்துதான் பாரிஜாதம் என்ற செடி உருவானது.

சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இந்த செடி பகலில் சூரியனை பார்த்து பூப்பதைத் தவிர்த்து இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குகிறது.

இதனால்தான் இதனை வருந்தும் மரம் என்றும் அழைப்பார்கள்.

தன்னைக் கைவிட்ட சூரியனைப் பார்ப்பதை தவிர்ப்பதற்காக இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து, கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் என்றும் விளக்குவார்கள்.

பாரிஜாதம் என்ற இந்த பவளமல்லி, திருமாலுக்கு உகந்தது.

பவளமல்லி வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் குடியிருப்பதாக நம்புகிறார்கள்.

தேவலோகத்தில் இருந்த இந்த பாரிஜாதமலர் வேண்டும் என்று சத்யபாமா, ருக்மிணி இருவரும் கிருஷ்ணபகவானிடம் கேட்கவே கிருஷ்ணர் பவளமல்லிமரத்தை கொண்டுவந்து சத்யபாமாவின் வீட்டுத் தோட்டத்தில் நட்டாராம்,

ஆனால், மரம் வளர்ந்து ருக்மிணி வீட்டில் பூக்களை உதிர்த்தது என்று
கூறப்படுகிறது.



கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில்!

மிருகங்கள் இறைவனைப் பூஜித்து பேறு பெற்ற தலங்கள் நம் நாட்டில் பல உண்டு.

குற்றாலம், திருவானைக்கா, மதுரை ஆகிய தலங்களில் யானையும்,
நல்லூரில் சிங்கமும், சாத்தமங்கையில் குதிரையும், கருவூர், பட்டீஸ்வரம, பேரூர் ஆகிய தலங்களில் பசுவும், சிவபுரத்தில் பன்றியும்,
தென் குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை ஆகிய ஊர்களில் குரங்குகளும், சோலூரில் மீனும்,
திருத்தேவன் குடியில் நண்டும் பூஜித்து பேறு பெற்றன.

அதேபோல் புனுகுப் பூனை ஒன்று சிவபெருமானை மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள கூறைநாடு
எனும் தலத்தில் பூஜித்துப்
பேறு பெற்றது.

அதனாலேயே இங்குள்ள ஈசன் புனுகீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

அம்பாளின் பெயர் சாந்த நாயகி.

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் இது.

ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது.

முகப்பில் நெடிதுயர்ந்த ஏழு நிலை ராஜ கோபுரம் உள்ளே நுழைந்ததும் விசாலமான மண்டபம்.

எதிரே பலிபீடமும், உயரமான கொடிமரமும். மண்டபத்தின் இடதுபுறம் அன்னை சாந்த நாயகியின் சந்நதியும் உள்ளது.

அம்பிகை நான்கு கரங்களுடன், நின்ற நிலையில் புன்னகை தவழ அருள் பாலிக்கிறாள்.

மேல் இரு கரங்களில் மாலையையும், தாமரை மலரையும் தாங்கி, கீழ்
இரண்டு கரங்களில் அபய,
வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை திகழ்கிறாள்.

அடுத்துள்ள மகாமண்டப நுழைவாயிலில் துவாரபாலகர்கள் காவல்
காக்க, இறைவனின் அர்த்த மண்டபம் விளங்குகிறது.

கருவறையில் இறைவன் புனுகீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

இறைவனின் தேவக்கோட்டத்தின் வடபுறம் துர்க்கை, பிரம்மா, கிழக்கே லிங்கோத்பவர், தெற்கே தட்சிணாமூர்த்தி, ஜுரதேவர் போன்றோர் திருமேனிகள் உள்ளன.

உட்பிராகாரத்தின் மேற்கில் பிள்ளையார், வடக்கில் நடராஜர், சிவகாமி,
மகாலட்சுமி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தெற்கில் நேசநாயனார், கிழக்கில் பைரவர், சூரியன் ஆகியோரை தரிசிக்கலாம்.

அம்மன் பிராகாரத்தின் வடக்குப் பகுதியில் சண்டிகேஸ்வரி அருள்பாலிக்கிறாள்.

வெளி பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் கலசமண்டபம் உள்ளது.

இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி
தரிசனம் அருள்கிறார்.

இந்த அமைப்பு அபூர்வமானது என்கின்றனர்.

இந்த ஆலயத்தின் தல விருட்சம் பவழமல்லி மரம்.

ஆலயத்தின் தீர்த்தமான திருக்குளம் ஆலயத்தின் தென்புறம் உள்ளது.

இந்த ஆலயம் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தைப் போன்ற வடிவமைப்பில் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

தல வரலாறு:

சிவபெருமான் எழுந்தருளியுள்ள மயிலாடுதுறைக்கு மேற்கே
பல நூற்றாண்டுகளுக்கு
முன் ஒரு காடு இருந்தது.

அரசு, கொங்கு, தேக்கு, அகில், சந்தனம், மூங்கில், நாவல், மா முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்து அது ஒரு அழகிய வனமாகத் திகழ்ந்தது.

பறவையினங்களும், விலங்கினங்களும் பகையின்றி அந்தக்
காட்டில் வாழ்ந்து வந்தன.

அங்கு தேவர்களும்,
திருமாலும், பிரம்மனும் வழிபடுவதற்காகவும், உயிரினங்கள் உய்யவும், பவழமல்லிகை நிழலில்
லிங்க வடிவில் தானே
தோன்றி சுயம்புவாக எழுந்தருளியிருந்தார் சிவபெருமான்.

அந்த வனத்தில் ஒரு புனுகுப் பூனை, தன் துணையுடனும், குட்டிகளுடனும் வாழ்ந்து வந்தது.

அதனிடமிருந்து வெளிப்பட்ட புனுகு வாசனை அந்த வனம் முழுவதும் ரம்மியமாகப் பரவியிருந்தது.

திடீரென்று ஒருநாள் அந்தப் புனுகு பூனைக்கு ஞானம் வந்தது.

“இதுவரை சாதாரணமான செயல்களையே செய்து வாழ்ந்து விட்டோமே!

இது என்ன வாழ்க்கை!

சிவபெருமானை வணங்கி பேரருளைப் பெற வேண்டும்” என அந்தப்பூனை நினைத்தது.

யானை, குதிரை, பசு, எருது, பன்றி, குரங்கு, பாம்பு, நண்டு, வண்டு, ஈ, எறும்பு, முயல், தவளை ஆகியன எல்லாம் இறைவனைப் பூஜித்து
நற்பேறு பெற்றுள்ளன.

நாமும் அவ்வாறே நற்கதியடைய வேண்டும்
என்று எண்ணிய அந்தப்
பூனை சிவபெருமானின் லிங்கத் திருமேனியைத்தேடி அலைந்தது.

வயல் சூழ்ந்த ஒரு சோலையில் பவழமல்லிகை மரத்தடியில் இறைவனின் லிங்கத் திருமேனியைக் கண்டது
அந்தப் பூனை.

மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு லிங்கத்திருமேனி முழுவதும் புனுகினை அப்பியது.

வில்வத் தளிர்களை வாயினால் கவ்வி இறைவனின் முடியில் சாத்தியது.

இறைவனை வலம்வந்து வணங்கியது.

இப்படியே சிவபெருமானைப் பல நாட்கள் அந்தப் புனுகுப்பூனை வணங்க
மனம் மகிழ்ந்த இறைவன் அதற்கு தேவ வடிவைக் கொடுத்து கயிலாயத்திற்கு அழைத்துக்கொண்டார்.

புனுகுப்பூனைக்கு இறைவன் அருள்புரிந்தமை அறிந்த பிரம்மன், திருமால், தேவர்கள் அனைவரும் பவழ மல்லிகை நிழலில் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை வந்தடைந்து பணிந்து
துதித்துப் பாடினர்.

‘இவரே புனுகீசர்’ என்று அந்த இறைவனுக்குப் பெயரிட்டு வணங்கினர்.

சோழ மன்னன் தன் காலத்தில் காட்டுப் பகுதியை அழித்து புனுகீசருக்கு அதே இடத்தில் ஒரு ஆலயத்தை அமைத்தான்.

இதுவே இந்த ஆலயத்தின் தல வரலாறு.

இந்தப் புனுகுப்பூனை பற்றிய இன்னொரு தல வரலாறும் உண்டு.

சிவபெருமானை மதியாமல் தட்சன் யாகம் நடத்தினான்.

தேவேந்திரன் அந்த யாகத்தில் கலந்து கொண்டதால் சிவபெருமானின் சினத்திற்கு ஆளாகி சாபம் பெற்றான்.

அந்த தேவேந்திரனே இறைவன் மகிழும் வண்ணம் புனுகுப்பூனை வடிவெடுத்து பூஜை செய்து சாப விமோசனம் அடைந்து, இழந்த இந்திர பதவியை மீண்டும் பெற்றான் என இன்னொரு தல வரலாறு கூறுகிறது.

இந்த ஆலயத்தில் உள்ள சுவாமி விமானம் கருங்கல்லினால் ஆனவர்.

ஆலயத்தின் உள்ளே தென்புறம் மிகப்பெரிய கல்யாண மண்டபமும், சுமார் 1500 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவுக் கூடமும் உள்ளன.

மிகவும் குறைந்த வாடகைக்கு இதை மக்கள் பயன்படுத்தி மனம் மகிழ்கிறார்கள்.

ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

சித்திரை மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின்போது
13 நாட்களும் இறைவனும் இறைவியும் வீதியுலா வருவதுண்டு.

இங்கு 63 நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகள் கண்களைக் கவரும்
வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை
மூல நட்சத்திரத்தில் 63 நாயன்மார்களும் வீதியுலா வருவதுண்டு.

நவராத்திரி நாட்களில் தினசரி இங்குள்ள துர்க்கைக்கு விதவிதமாக அலங்காரம் செய்வதுண்டு.

தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 6 முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும்.

கன்னிப் பெண்கள் இறைவிக்கு மாங்கல்யம் செய்து அணிவிக்க அவர்களுக்கு விரைந்து திருமணம் நடைபெறும் எனவும், அம்மனை அங்கப்பிரதட்சணம் செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்துக்கு மேற்கே இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது கூறைநாடு.

பவளமல்லி மரம் தல விருட்சமாக இருக்கும் பிற ஆலயங்கள்:

தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில்
உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திருவைகுண்டத்தில் உள்ள கண்ணபிரான், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவளமல்லி தலவிருட்சமாக உள்ளது.

Tuesday, April 30, 2024

ஸ்ரீரங்கத்தில் சித்ரா பெளர்ணமி--கஜேந்திர மோட்சம் உற்சவம் !

 ஸ்ரீரங்கத்தில் சித்ரா பெளர்ணமி--கஜேந்திர மோட்சம் உற்சவம் !
    🌕🐘🙏🌕🐘🤚🌕🐘🤚

"மீனமர் பொய்கை நாண் மலர்
கொய்வான்,வேட்கையினோடு சென்று இழிந்த-
கானமர் வேழம், கை எடுத்து அலறக்,கரா வதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப், புள்ளூர்ந்து சென்று நின்று, ஆழி தொட்டானை,
தேனமர் சோலை மாட மாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே !"
 (பெரிய திருமொழி 2-3-9)

--"மீன்கள் அமர்ந்ததொரு தடாகத்திலே புதிய புஷ்பங்களைப் பறிக்க வேணும், என்கிற விருப்பத்தோடு போய் இறங்கின காட்டில் திரியும் கஜேந்திரன், தனது துதிக்கையை உயரத் தூக்கிக் கூச்சலிடும்படியாக, முதலையானது அந்த யானையின் காலைத் கௌவிக் கொள்ள, அந்த யானையினுடைய மனவருத்தம் தீரும்படி பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டு பொய்கைக் கரையிலே எழுந்தருளி அங்கே நின்று திருவாழியை அந்த முதலையின்மீது பிரயோகித்த பெருமானை, தேன்மாறாத சோலைகளையுடைய மாடம் மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேன்."

ஸ்ரீரங்கத்தில் சித்ரா பெளர்ணமி அன்று நம்பெருமாள் தென் திருக்காவேரிக்கு எழுந்தருளி,காவிரி ஆற்றில் யானை கஜேந்திரனுக்கு மோட்சம் அளிக்கும் வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது
இந்த உற்சவம் திருவூறல் உற்சவம் என்றும் அழைக்கப் படுகிறது.

இந்த ஆண்டு சித்ரா பெளர்ணமியான நேற்று காலை(23/04) நம்பெருமாள் காலை 7 மணிக்குப் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 10.30க்கு தென் திருக்காவேரிக் கரையில் உள்ள அம்மா மண்டபத்தில் எழுந்தருளினார்.
பகல் 12 மணியிலிருந்து 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.

1.கஜேந்திர ஆனைக்கு  மோட்சம் அருளும், குட பால ஆனை !

  🙏🐘🐘🤚🐘🐘🤚🐘🐘🤚🙏

தென் ஆனாய்(திருமாலிருஞ் சோலை அழகர்),
வட ஆனாய் (திருவேங்கடவர்),
குட பால ஆனாய்(மேற்கில் திருவரங்கர்)
குணபால மத ஆனாய்(கிழக்கில் திருக்கண்ணபுரம் செளரிராஜர்)-- இமையோர்க்கு என்றும் முன்னானாய்,
பின்னானார் வணங்கும் சோதி !
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே !(திருநெடுந்தாண்டகம்-10)

மாலை 6 மணிக்குப் புறப்பட்டு காவிரிக்கரைக்கு எழுந்தருளி,காவிரி ஆற்றில் நின்று கொண்டிருந்த பெரிய கோயில் யானை ஆண்டாளுக்கு அநுக்ரஹம் செய்தார்.யானையின் சிரசில்,அர்ச்சகர்கள் நம்பெருமாளின் திருவடிகளான ஸ்ரீ சடகோபம் சாதித்தனர்.யானையின் நெற்றியில் பெருமாள் அருளித்தந்த சந்தனம் சாத்தப்பட்டது. அதன்பின் நம்பெருமாள் அம்மா மண்டபம் திரும்பினார்.அங்கு மங்கள ஆரத்தி ஆன பின் பொதுமக்கள் சேவை முடிந்து இரவு 8.15க்குப் புறப்பட்டு ஆஸ்தானம் அடைந்தார்.

2.நம்பெருமாள் நடையழகுக்கு ஈடாகப் பாடிய நல்லரையர்:
   🔔🔊🕪🕩🔉📢📣📯🕭
ஒரு திருவூறல் உற்சவத்தில்--சித்ரா பௌர்ணமியன்று,தென்திருக்காவேரியிலிருந்து,புறப்பட்ட போது,(ஸமரபூபாலன் என்னும் கேடயம் போன்ற வாகனத்தில்)
அரையரிடம்,"நம் நடையழகுக்கு ஈடாகப் பாடும்" என்று நியமித்தார்.அரையர் அவ்வாறே நமபெருமாளை இசையில் ஏத்திக் கொண்டு கோவில் ஆஸ்தானம் வந்தார்.2.5 கி.மீ.தூரம் பின்னோக்கி
(பின்புறம் திரும்பாமல்),
நம்பெருமாள் நடையழகுக்குத் தக்க, தாள இசையுடன் பாடிக் கொண்டு வந்தார்!!.இந்த வைபவம், இன்றும் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியன்றும் நடைபெறுகிறது.

3.கஜேந்திர மோட்சம் உணர்த்தும் தத்துவம் :
    🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏
கஜேந்திராழ்வான் எம்பெருமான் திருவடிகளுக்குச் சாற்றுகைக்காகத் தாமரை மலர் பறித்த போது,முதலை கஜேந்திரன் காலைக் கவ்வித் துன்புறுத்தியது.அது போல,
எம்பெருமான் மீது பக்தி கொண்டுள்ள  நம்மை ஐம்புலன்கள்(கண்,வாய்,மூக்கு,
காது,மெய்(உடம்பு) ஆகியவை தங்கள் ஆயுதங்களான காட்சி,சுவை/வாக்கு,மணம், ஒலி,ஸ்பர்ஸம்  ஆகியவற்றின் மூலம்  அடிமைப் படுத்தி) என்னும் முதலை கவ்வித் துன்புறுத்துகிறது.
கஜேந்திரன்"நாராயாணா! ஓ!மணி வண்ணா!! நாகனையாய்!! வாராய்! என் ஆரிடரை நீக்காய்"என்று  ஓலமிட்ட போது,எம்பெருமான் ஓடோடி வந்து காப்பாற்றியது போல,நாமும் எம்பெருமான் திருவடிகளில் சரணடைந்து,அவன் நாமங்களைப் பக்தியுடன் சொன்னால் கடுக வந்து,
 அந்தக் கொடிய ஐம்புலன் பிடியிலிருந்து,நம்மை விடுவித்து உய்விப்பார்

Thursday, March 14, 2024

திருக்கோளூர்🙏 ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் *குபேரனுக்கு படியளந்த நாள்

 திருக்கோளூர்🙏 ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள்   *குபேரனுக்கு படியளந்த நாள் (மாசிமாதம் 9ம் தேதி) 21/02/2024(புதன்கிழமை)

🙏🌹🙏 திருக்கோளூர் அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்  நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும் நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.


புராண சிறப்பு:
முற்காலத்தில் வடதிசைக்கு அதிபதியாகிய குபேரன் அளகாபுரியில் வசித்து வந்தார் அவர் மிகச் சிறந்த சிவன் பக்தர். ஒரு நாள் சிவபெருமானை நேரடியாக தரிசிக்க கைலாயத்தை அடைந்தார். அப்பொழுது சிவபெருமானுடன் தனித்திருந்த பார்வதிதேவி மிகுந்த அழகுடன் காண விளங்கினார்.

தனத்திற்கு அதிபதியாகிய குபேரன் தேவதேவியரின் தனிமையை உணராது தரிசிக்க சென்ற போது அதிரூபமாகிய இவள் யார் என்று கௌரியை உற்று நோக்குகின்றார். இதை கண்ட உமையவள் கோபம் கொண்டு ‘நீர் கெட்ட எண்ணத்துடன் என்னை பார்த்தீர் எனவே உமது ரூபம் விகாரமடையக்கடவது, நவநிதிகளும் உம்மை விட்டகலும், ஒரு கண்ணையும் இழப்பீர்' என சபித்துவிடுகிறார். 

குபேரன் மிகவும் மனவருத்தமடைந்து சிவபெருமானை துதித்து நடந்த விஷயத்தை தெரிவிக்கிறார். சிவபெருமானும் திருமாலை சரணடையுமாறு கூறுகிறார்.


குபேரன் தன் சங்க நிதி பதும நிதி உட்பட நவநிதிகளை இழந்து ஆதரிப்பார் யாருமின்றி பூலோகம் வந்தடைந்து பொருநையாற்றின் தென்கரையில் புனித நீராடி பகவானை குறித்து கடும் தவம் செய்தார். 

குபேரனின் தவத்திற்கு இரங்கிய பகவான் மாசி மாதம் சுக்லபட்சம் வளர்பிறை துவாதசி திதி அன்று தாமிரபரணி நதி தீர்த்தத்தில் நீராடச் செய்து சாபம் நீக்கி அருள் புரிந்தார்.


வைத்தமாநிதி என்ற திருநாமத்துடன் நவநிதிகளின் மீது சயனம் கொண்டு அவற்றை காப்பாற்றி அருளினார். குபேரனும் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று தன் இருப்பிடம் வந்தடைந்தார்.

இலக்கியச் சிறப்பு:
பன்னிரெண்டு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் அவதரித்த திருத்தலமாகும். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.


தனிச்சிறப்பு:
நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும் நவக்கிரகங்களில் செவ்வாய்த் தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. 

மேலும் செல்வநிலையில் சிறப்படையவும் இழந்த செல்வங்களை மீண்டும் திரும்பப் பெறுவதற்கும் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபடுவது சிறப்பு.


ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள பெருமாள் மரக்காலை (நெல் அளக்க பயன்படும் மரத்தாலான பாத்திரம்) தலைக்கு வைத்து படுத்திருப்பது ஆதனூருக்கு அடுத்து இத்திருத்தலத்தில் மட்டுமே ஆகும்.

அமைவிடம்:
திருநெல்வேலி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆழ்வார் திருநகரியிலிருந்து மூன்று கிலோமீட்டார் தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து போக்குவரத்து வசதி உள்ளது.

இறைவன் : அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள்


இறைவியர் : அருள்மிகு குமுதவல்லி


அருள்மிகு: கோளூர்வல்லி


தீர்த்தம்  : குபேர தீர்த்தம்


தலவிருட்சம் : புளிய மரம்


ஆகமம்  : வைகாநச ஆகமம்


விமானம்  ஸ்ரீகர விமானம்


சிறப்பு செய்தி:
குபேரன் தான் இழந்த செல்வத்தை பரமனைப் போற்றி மீண்டும் பெற்ற நாளாக தல வரலாற்றில் கூறப்படுவதாது,
மாசி மாதம் சுக்லபட்சம் வளர்பிறை துவாதசி திதி அன்று என்பதாகும். 

 

செல்வ வளம் பெற விரும்புபவர்களும் தாங்கள் இழந்த செல்வத்தை மீண்டும் பெற விரும்புபவர்களும் *

அன்றைய  தினம் இத்தலத்திற்கு வந்து பெருமாளை வழிபடுவது சிறப்பு.

Thursday, February 22, 2024

திருக்கோளூர்🙏 ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் குபேரனுக்கு படியளந்த நாள்

 🙏திருக்கோளூர்🙏 ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள்   *குபேரனுக்கு படியளந்த நாள் (மாசிமாதம் 9ம் தேதி) 


🙏🌹🙏 திருக்கோளூர் அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்  நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும் நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.


புராண சிறப்பு:
முற்காலத்தில் வடதிசைக்கு அதிபதியாகிய குபேரன் அளகாபுரியில் வசித்து வந்தார் அவர் மிகச் சிறந்த சிவன் பக்தர். ஒரு நாள் சிவபெருமானை நேரடியாக தரிசிக்க கைலாயத்தை அடைந்தார். 

அப்பொழுது சிவபெருமானுடன் தனித்திருந்த பார்வதிதேவி மிகுந்த அழகுடன் காண விளங்கினார்.

தனத்திற்கு அதிபதியாகிய குபேரன் தேவதேவியரின் தனிமையை உணராது தரிசிக்க சென்ற போது அதிரூபமாகிய இவள் யார் என்று கௌரியை உற்று நோக்குகின்றார். இதை கண்ட உமையவள் கோபம் கொண்டு ‘நீர் கெட்ட எண்ணத்துடன் என்னை பார்த்தீர் எனவே உமது ரூபம் விகாரமடையக்கடவது, நவநிதிகளும் உம்மை விட்டகலும், ஒரு கண்ணையும் இழப்பீர்' என சபித்துவிடுகிறார். 

குபேரன் மிகவும் மனவருத்தமடைந்து சிவபெருமானை துதித்து நடந்த விஷயத்தை தெரிவிக்கிறார். சிவபெருமானும் திருமாலை சரணடையுமாறு கூறுகிறார்.


குபேரன் தன் சங்க நிதி பதும நிதி உட்பட நவநிதிகளை இழந்து ஆதரிப்பார் யாருமின்றி பூலோகம் வந்தடைந்து பொருநையாற்றின் தென்கரையில் புனித நீராடி பகவானை குறித்து கடும் தவம் செய்தார். 

குபேரனின் தவத்திற்கு இரங்கிய பகவான் மாசி மாதம் சுக்லபட்சம் வளர்பிறை துவாதசி திதி அன்று தாமிரபரணி நதி தீர்த்தத்தில் நீராடச் செய்து சாபம் நீக்கி அருள் புரிந்தார்.


வைத்தமாநிதி என்ற திருநாமத்துடன் நவநிதிகளின் மீது சயனம் கொண்டு அவற்றை காப்பாற்றி அருளினார். குபேரனும் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று தன் இருப்பிடம் வந்தடைந்தார்.

இலக்கியச் சிறப்பு:
பன்னிரெண்டு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் அவதரித்த திருத்தலமாகும். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.


தனிச்சிறப்பு:

நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும் நவக்கிரகங்களில் செவ்வாய்த் தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. மேலும் செல்வநிலையில் சிறப்படையவும் இழந்த செல்வங்களை மீண்டும் திரும்பப் பெறுவதற்கும் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபடுவது சிறப்பு.
ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள பெருமாள் மரக்காலை (நெல் அளக்க பயன்படும் மரத்தாலான பாத்திரம்) தலைக்கு வைத்து படுத்திருப்பது ஆதனூருக்கு அடுத்து இத்திருத்தலத்தில் மட்டுமே ஆகும்.



அமைவிடம்:
திருநெல்வேலி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆழ்வார் திருநகரியிலிருந்து மூன்று கிலோமீட்டார் தொலைவில் அமைந்துள்ளது. 

திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து போக்குவரத்து வசதி உள்ளது.



இறைவன் : அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள்
இறைவியர் : அருள்மிகு குமுதவல்லி
அருள்மிகு: கோளூர்வல்லி
தீர்த்தம்  : குபேர தீர்த்தம்
தலவிருட்சம் : புளிய மரம்
ஆகமம்  : வைகாநச ஆகமம்
விமானம்  ஸ்ரீகர விமானம்


சிறப்பு செய்தி:

குபேரன் தான் இழந்த செல்வத்தை பரமனைப் போற்றி மீண்டும் பெற்ற நாளாக தல வரலாற்றில் கூறப்படுவதாது, 

மாசி மாதம் சுக்லபட்சம் வளர்பிறை துவாதசி திதி அன்று என்பதாகும்.
இந்த நாள் இந்த வருடத்தில் புதன்கிழமை 21/02/2024. செல்வ வளம் பெற விரும்புபவர்களும் தாங்கள் இழந்த செல்வத்தை மீண்டும் பெற விரும்புபவர்களும் *அன்றைய  தினம் இத்தலத்திற்கு வந்து பெருமாளை வழிபடுவது சிறப்பு.
ஸ்ரீராமஜெயம்

Wednesday, February 14, 2024

அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீதேவி ,பூதேவி உடனுறை ஸ்ரீரங்கநாத பெருமாள் திருக்கோவில்.

 கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே 

 

 

 

 


 

 

 

 

 

 

அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீதேவி ,பூதேவி உடனுறை ஸ்ரீரங்கநாத பெருமாள் திருக்கோவில்.

18.5 அடி நீளமும் 5 அடி உயரத்துடன் காணப்படும் பெருமான் இறைவனின் உருவம், சாளக்கிராம கல்லால் செய்யப்பட்டது.

திருவிழாக்கள்
ராம நவமி, பங்குனி உத்திரம், வைகுண்ட ஏகாதசி இங்கு கொண்டாடப்படுகிறது.

காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது.

ஆதிசேசன் என்படும் ஐந்து தலைகள் கொண்ட நாகப் பாம்புவின் மீது சயன திருக்கோலத்தில் ஸ்ரீரங்கநாத பெருமாள் பள்ளிக்கொண்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவரது நாபியின் மீது பிரம்மா உள்ளார். இறைவனின் பாதித்திற்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருவரும் அமர்ந்து, களைப்பில் இருக்கும் பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றனர்பெருமாளின் திருவடியை சேவித்த நிலையில், தும்புறு மகரிஷியும், பக்த ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர்.

இந்த இடமானது தேவர்களால் தானமாக வழங்கப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த ஊர் தேவதானம் என்று அழைக்கப்பட்டது.

தேவதானம்.
( வட ஸ்ரீரங்கம் )

திருவள்ளூர் மாவட்டம்.

Tuesday, January 30, 2024

ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் 🪷 கோயில் கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

 🙏🙏 கோபுர தரிசனம் கோடி புண்ணியம்🙏🙏




🪷🪷🪷 ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் கோயில் 🪷🪷🪷

🪷 மூலவர் :
 🙏சுத்த
ரத்தினேஸ்வரர்

🪷 உற்சவர் :
 🙏சோமாஸ்கந்தர்

🪷 தாயார் :
 🙏அகிலாண்டேஸ்வரி

🪷 தீர்த்தம் :
 🙏பிரம்ம தீர்த்தம்

🪷 ஊர் :
 🙏ஊட்டத்தூர்

🪷 மாவட்டம் :
 🙏திருச்சிராப்பள்ளி

 தேவார வைப்புத் தலப்பாடல் பாடியவர்கள் :

 🙏அப்பர்

 தலவரலாறு

🪷ஊட்டத்தூரின் மேற்கே உள்ள சோளேஸ்வரம் எனும் கோயிலை அமைத்த ராஜராஜ சோழன் அடிக்கடி அப்பகுதிக்கு வருவது வழக்கமாக இருந்த சமயம் ஒருமுறை மன்னர் வருகைக்காகப் பாதையைச் சரிசெய்யும் பணியில் மண்வெட்டியால் புல் செதுக்கும் பொழுது ஓரிடத்தில் இரத்தம் வரவே, இச்செய்தி மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது.

🪷 மன்னர் வந்து சோதித்து சிவலிங்கத்தைக் கண்டு, மன்னிக்க வேண்டி அவருக்கு திருக்கோயில் எழுப்பினார். மூலவர் சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் மண்வெட்டி வடு உள்ளது

 நந்தி ஆறு

🪷புண்ணியநதிகள் தம்முள் எவர் பெரியவர் என்ற போட்டியில் சிவபெருமானிடம் தீர்ப்புக்கு வர, நந்தியை அழைத்து அனைத்து நதிகளையும் குடித்துவிடும் படியும் எந்த நதியைக் குடிக்கமுடியவில்லையோ அதுவே சிறந்தது எனக்கூற, நந்தியெம்பெருமானால் கங்கையைக் குடிக்க முடியாததால் அதுவே சிறந்தது எனத் தீர்ப்பாயிற்று. தாம் குடித்த நதிகளை எல்லாம் வெளியே நந்தியெம்பெருமான் வெளியே விட, அதுவே நந்தி ஆறு என ஆயிற்று


 பிராத்தனை

 நோய்தீர்க்கும் தீர்த்தம்


🪷பஞ்ச
நதனக்கல்லுக்கு மருத்துவச் சிறப்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. பஞ்சநதனக்கல் நடராஜருக்கு வெட்டிவேர் மாலையிட்டுப் பின்னர் அம்மாலையைப் பிரம்ம தீர்த்தத்தில் போட்டு அந்த தீர்த்தத்தைப் பருக சிறுநீரகக்கோளாறுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை

 முகவரி

🪷அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்,
லால்குடி தாலுகா,
பாடலூர் வழி,
ஊட்டத்தூர்,
திருச்சி 621109.

தொலைபேசி:
+91 83449 11836.

     🕉 சிவாய நம;

Sunday, January 14, 2024

திருவரங்குளம் அரங்குள நாதர் கோயில்🪷🪷கோபுர தரிசனம் கோடி🪷🪷புண்ணியம் தினம் ஒரு திருக்கோயில்🪷🪷

 🛕தினம் ஒரு திருக்கோயில்:-🔔

*🛕கோபுர தரிசனம் கோடி புண்ணியம்:*🪔

            🙏🙏🙏🙏🙏


🪷🪷🪷 திருவரங்குளம் அரங்குள நாதர் கோயில்


🪷 மூலவர் :
 🙏அரங்குள நாதர்
(ஹரதீர்த்தேசுவரர்)

🪷 தாயார் :
 🙏பெரியநாயகி அம்பாள்
(பிரகதாம்பாள்)

🪷 தல விருட்சம்
 🙏 பொற்பனை

🪷 மாவட்டம் :
 🙏புதுக்கோட்டை

🪷 ஊர்:
 🙏திருவரங்குளம்

 தல வரலாறு;

🪷 2000ம் வருடங்களுக்கு முன் கரிகால சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோவில். இக்கோவிலில் ஒரு குளம்  உள்ளது அக்குளத்து மட்டத்துக்கு லிங்கம் காணப்படவதால் அரங்குலநாதர்/ஹரதேஸ்வரர் என்று பெயர் பெற்றது.

🪷 அந்த  சுவாமியின் பெயர் மருவி திருவரங்குளம் என்று ஊரின் காரண பெயராக அமைந்தது.  அம்பாளுக்கு இது பூர நட்சத்திர கோவில்.   இந்த கோவில் ராஜாக்கள் வேட்டையாடி வந்த போது பனை மரம் இருந்தது.

🪷இந்த பழங்கள் தங்க பழமாக காட்சி அளித்தது.  அந்த  பழத்தின் பெயர் பொற்பனை.  அங்கு இருக்கும் விநாயகர் பெயர் பொற்பனை விநாயகர் என்று பெயர்.  இங்கு இருந்து 3 மைல் தொலைவில் முனிஸ்வரர் கோவில் உள்ளது.

🪷இந்த முனீஸ்வரர் பெயர் பொற்பனை முனீஸ்வரர்.  இந்த முனீஸ்வரர்  புதுகோட்டை மாவட்டம் காவல் தெய்வம்.  மூலாதார சக்தி உடைய அம்மனாக கருதப்படுகிறது.

🪷 வடநாட்டு செட்டியார் என்ற  பிரிவினர்கள் இக்கோவிலுள்ள தானியத்தை கண்டுபிடித்து ராஜாக்களிடம் ஒப்படைத்தனர்.  அம்பாளே செட்டியாரின் குழந்தையாய்  பிறந்து அவர்களின் குழந்தை பாக்கியத்தை தீர்த்தாள் மறுபடியும் இறைவனிடம் சேர்ந்தார்.


 பிரார்த்தனை:

🪷 குழந்தை இல்லாதவர்கள், கல்யாணமாகதவர்கள், அம்பாளை வழிபட்டு பலன்  அடையாலம்.  பூர நட்சத்திரம் உடையவர்கள் கல்யானமகதவர்களாக இருந்தால் அவர்கள் இக்கோவிலை வழிபட்டால் உடனே பலன்  அடையாலம்.  ஏனென்றால் அம்பாளுக்கும் பூர நட்சத்திரம் இருந்து கல்யாணம் நடைபெற்றதால் இங்கு பூர நட்சத்திரம்  உடையவர்கள் பலன் அடையாலம்.

 முகவரி:

🪷அருள்மிகு அரங்குலநாதர் திருக்கோவில்,

திருவரங்குளம், புதுக்கோட்டை-
622 505,

     🕉 சிவாய நம:

தவறு என்பதை உணர்ந்த லட்சுமணன், மன்னிப்பு வேண்டி பெருமாளிடம் அடிபணிந்து நின்ற கோயில்........ பற்றி - விளக்கும் எளிய கதை

 ஓம் நமோ நாராயணாய 🙏



 

 

 

🌹🌺"  தவறு என்பதை உணர்ந்த லட்சுமணன்,  மன்னிப்பு வேண்டி  பெருமாளிடம் அடிபணிந்து நின்ற கோயில்........ பற்றி  - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹கேரளாவின் பிரசித்தி பெற்ற பாரதப்புழா நதிக்கரையில் இந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இத்தலம் ஒரு காலத்தில் பெரிய கலாக்ஷேத்திரமாக விளங்கியிருக்கிறது.

🌺"ஸ்ரீஸுஸீக்தி' இங்கு அருளப்பட்டதால் பல வகையான நூல்கள் இங்கு ஆராயப்பட்டன. இதனால் கற்றறிந்த பெரியோர்கள் குழுமியிருந்த கல்வி மாநகரமாகவும், கலை நகரமாகவும் இத்தலம் சிறப்புற்றிருந்தது.

🌺ஸ்ரீ ராமன் வனவாசம் செல்லும்போது சித்திர கூடத்தில் தங்க நேரிட்டது. அப்போது அயோத்திக்கே ராமனை மீண்டும் அழைத்து செல்ல பரதன் அங்கு வந்தான்.

🌺இதைக்கண்ட லட்சுமணன், ராமனுடன் போர் செய்யவே பரதன் வருவதாக நினைத்து, அவனை கொல்ல முயற்சிக்கிறான் .

🌺இது தவறு என்பதை உணர்ந்த லட்சுமணன், தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்து பெருமாளிடம் அடிபணிந்து நின்றதாகவும், அப்போது பரதனே வந்து லட்சுமணனை ஆரத்தழுவி இன்சொல் கூறியதாகவும், இதனால் இத்தலம் "திருமொழிக்களம்' ஆனதாகவும் கூறுவர்.

🌺அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகள்  பழமையானது  
  புராண பெயர் : திருமூழிக்களம்
  மாவட்டம் : எர்ணாகுளம்
  மாநிலம் : கேரளா

🌺பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 62 வது திவ்ய தேசம்.லட்சுமணனும் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். இத்தலத்திற்கு கோபுரம், மண்டபம் போன்றவற்றை லட்சுமணன் கட்டி பல திருப்பணிகள் செய்துள்ளான்.  
     
🌺🌹 வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க 🌷🌹
-------------------------------------------------
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் *

Friday, January 12, 2024

🛕தெய்வங்கள் பேசும் சப்தம் கேட்கும் விசித்திர ஆலயம்🛕 #திருபுரசுந்தரிஆலயம்

 🛕தெய்வங்கள் பேசும் சப்தம் கேட்கும் விசித்திர ஆலயம்🛕
                     
🪄பிஹாரில் இருக்கும் பஸ்தார் என்னும் இடத்தில் அமைந்துள்ளது ராஜராஜேஸ்வரி #திருபுரசுந்தரி ஆலயம்.

🪄இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.நம் நாட்டில் புராதன கோவில்கள் ஏராளமாக இருந்தாலும்,ஒரு சில கோவில்கள் மிகவும் விசித்திரமான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது.



🪄ராஜராஜேஸ்வரி திரிபுரசுந்தரி கோவிலில் இரவில் தெய்வங்கள் ஒன்று கூடி பேசிக் கொள்வது போல் சப்தம் கேட்பது அவ்வூர் மக்களுக்கு மர்மமான விஷயமாக இருந்து வருகிறது.

🪄ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் ‘தாந்திரிக் பவானி மிஸ்ரா’என்பவரால் நிறுவப்பட்டது.அவர் அக்காலத்திலேயே தாந்திரீகம் மற்றும் வேத முறைப்படி எழுப்பிய இக்கோவில் மிகவும் மதிப்பிற்குரியதாக கருதப்படுவதால் இங்கு நிறைய தாந்திரீகர்கள் மற்றும் வேத சாஸ்திரம் பயின்றவர்கள் வருகை தருகின்றனர்.

🪄இங்கு திரிபுரா,
துமாவதி,
பகுளாமுகி,
தாரா,
காளி,
சின்ன மஸ்தா,
ஷோடசி,
மாதங்கி,
கமலா,
உக்ரதாரா,
புவனேஸ்வரி 

ஆகிய தேவியர்களுக்கு சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

🪄இங்கு மூலஸ்தானத்தில் துர்காதேவி வீற்றிருக்கிறாள்.இந்திய மக்களால் அதிக அளவில் வணங்கப்படும் தெய்வமாக #துர்காதேவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

🪄இந்தியா மட்டுமல்லாமல் நம் தமிழ்நாட்டிலும் தீயவைகளை அழிக்கும் துர்கா தேவிக்கு தனி சிறப்புகள் உண்டு.

🪄இக்கோவிலில் இரவு வேளை பூஜை முடிந்ததும் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது போன்ற சப்தம் மதில் சுவர் வாயிலாக கேட்கப்படுகிறது.இது மிகவும் ஆச்சரியப்படும் வகையில் உள்ளதால் இக்கோவில் மக்களிடையே பிரபலமானது.

🪄இதனை ஆராய்ச்சி செய்வதற்கு வந்த விஞ்ஞானிகள் குழு ஒரு நாள் இரவு முழுவதும் அங்கு தங்கி இருந்தனர்.வழக்கமாக இரவு நேரத்தில் இங்கே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.இரவில் கோவிலின் மதில் சுவரில் எதிரொலித்த வண்ணம் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதை போல் சப்தங்கள் கேட்பது உறுதி செய்யப்பட்டது.

🪄இந்த சப்தம் மனிதர்கள் பேசுவதை போலவே எதிரொலித்தது. ஆனால் நிச்சயமாக அது இந்த கோவிலின் வெளியில் இருந்து வரவில்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.

🪄இந்நிலையில் எதனால் இந்த சப்தம் எழுகிறது?என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர்,ஆராய்ச்சி செய்ய வந்த விஞ்ஞானிகள் குழு.


🙏🛕🙏ௐ சக்தி பராசக்தி🙏🛕🙏

🙏🪄🙏#சர்வம் #சக்திமயம்.✍🏼🌹


Wednesday, January 3, 2024

தமிழகத்தின்_காசி எது தெரியுமா..?

 தமிழகத்தின்_காசி எது தெரியுமா..?

எல்லா ஊர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்புப் பெற்றது என்றாலும், சில ஊர்களுக்கு மகான்களாலோ, அறிஞர்களாலோ மிகப்பெரிய சிறப்பு  ஏற்பட்டு விடுகிறது.

அந்த வகையில் தமிழகத்தின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்றாக விளங்குவது #காஞ்சிபுரம்.

ஏனெனில், இங்கு தான் உலகாளும்  ஈஸ்வரியான காமாட்சியும், நடமாடும் தெய்வமான காஞ்சி மகாப்பெரியவரும் அருளாட்சி செய்கின்றனர்.

நகரங்களில் மிகவும் சிறந்தது காஞ்சி  என்பதை நகரேஷு காஞ்சி என்ற வடமொழிச் சொல் குறிப்பிடுகிறது.

பாரதத்தில், அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்துவார்), காசி, அவந்திகா (உஜ்ஜயினி), துவாரகை ஆகிய வடமாநில ஊர்களுடன் தென்னகத்தின் காஞ்சிபுரம் உட்பட ஏழு இடங்கள் மோட்சத்தை தரும் மோட்சபுரிகள் என  அழைக்கப்படுகின்றன.

உலகம் அழியும் காலத்தில், ஒரு சில ஊர்கள் மட்டும் அழியாது என புராணங்கள் கூறுகின்றன.

அதில் சிவனால் பாதுகாக்க ப்படும் தலம் கும்பகோணம்.

அன்னை காமாட்சியால் பாதுகாக்கப்படும் தலம் காஞ்சிபுரம்.

எனவே இந்த ஊரை பிரளயஜித் க்ஷேத்ரம் என்பர். பிரளயம் என்றால் உலக அழிவு. ஜித் என்றால் வெற்றி.

இங்கிருக்கும் காமாட்சி மூன்று தேவியரின் அம்சமாகத் திகழ்கிறாள்.

ஸ்ரீதேவியான லட்சுமி, வாக்தேவியான சரஸ்வதி, சவுபாக்கிய தேவதையான  அம்பாள் ஆகியோர் வாசம் செய்யும்  ஊர் இது.

இவ்வூரை விட்டு, இவர்கள் ஒருநாளும் பிரிவதில்லை என்ற அந்தஸ்தைக் கொண்டது.

புண்ணிய  பாரதத்தின் நாபி (தொப்புள்) ஸ்தலமாக விளங்குவது காஞ்சிபுரம்.

பிரம்மா செய்த வேள்வியின் போது, அவிர்பாகம் ஏற்ற திருமால், சங்கு சக்கர  கதாதாரியாய் இவ்வூரில் தங்கி அருள்பாலிக்கிறார்.

இவ்வூரின் வரதராஜப் பெருமாள், உலகளந்த பெருமாள் கோயில்கள் பிரம்மாண்டமானவை.

இது பஞ்சபூத க்ஷேத்ரங்களில் பிருத்வி(நிலம்) தலமாகவும் விளங்குகிறது.

இங்குள்ள கைலாசநாதர் கோவில் கருவறையைச் சுற்றி வரும்போது,  சொர்க்க பிரதட்சணம் என்ற வாசல் வழியாக வெளியே வருவர்.

இப்படி  வெளியேறுபவர்களுக்கு மறுஜென்மம் ஏற்படாது என்பர்.

இங்குள்ள கச்சபேஸ்வரர் கோயிலிலுள்ள இஷ்டசித்தி தீர்த்த நீரைத் தெளித்தாலே  போதும்.

தீர்க்காயுள் கிடைக்கும்.

தேனம்பாக்கத்திலுள்ள சிவாஸ்தானம் கோயிலில் மிகப்பெரிய விசேஷம்.

சிவபார்வதியின் நடுவில் முருகன்
இருந்தால் சோமாஸ்கந்தர் என அழைப்போம்.

இங்கே முருகனுக்கு பதிலாக விநாயகர் நடுவில் இருக்கிறார்.

காஞ்சிப்பெரியவர் விருப்பமுடன் இங்கு  தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த சிறப்பு பெற்ற இடம் இது.

கந்தபுராணம் எழுதிய கச்சியப்ப சிவாச்சாரியார் வாழ்ந்த பூமி இது.

அவரால் புகழப்பட்ட  குமரக்கடவுள் அருளும் குமரக்கோட்டம் கோயில் இங்கு தான் உள்ளது.

காஞ்சிபுரத்தை சத்யவிரத க்ஷேத்ரம் என்றும் புகழ்வர்.

உண்மை  குடியிருக்கும் ஊர் இது.

எந்த உண்மை! சாட்சாத் காமாட்சியே
நம்மைக் காக்க வல்லவள் என்ற உண்மை!

இதுபோன்ற தலங்களில் செய்யும் தானம்,  பிராயச்சித்தம், அனுஷ்டிக்கும் விரதங்களுக்கு நூறு மடங்கு புண்ணியம் அதிகம்.

#தமிழகத்தின்_காசி என்றால் அது #காஞ்சிபுரம் தான்

கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே | அருள்மிகு ஸ்ரீ ஸ்வர்ணகால பைரவர் திருக்கோவில்.

 கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே ||


அருள்மிகு ஸ்ரீ ஸ்வர்ணகால  பைரவர் திருக்கோவில்.

காசியிலிருக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு நிகரான ஷேத்திரம்.

ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


சன்னதியின் மண்டபத்தின் மேல் பகுதியில்  பைரவரின் எட்டு கோலங்களையும் சுதை வடிவில் தரிசிக்கலாம். அன்ன வாகனத்துடன் கூடிய பிராம்மி சக்தியுடன் அசிதாங்க பைரவர்; ரிஷப வாகன மகேஸ்வரியுடன் ருரு பைரவர்;
மயில் வாகன கவுமாரியுடன் சண்ட பைரவர்;
கருட வாகன வைஷ்ணவியுடன் குரோதன பைரவர்; குதிரை வாகன வாராஹியுடன் உன்மத்த பைரவர்; யானை வாகன இந்திராணியுடன் கபால பைரவர்;
சிம்ம வாகன சாமுண்டியுடன் பீஷண பைரவர்;
நாய் வாகன சண்டிகையுடன் சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்களை இங்கு காணலாம்.

சுமார் 500 வருடங்கள் பழைமையான திருக்கோயில். இத்திருக்கோயில் பைரவர் தெற்கு நோக்கி காட்சிதந்து, சுனவாகனம் கிழக்கு நோக்கி தனிக்கோயிலாக அருள் பாலிக்கிறார்,

இதை ‘அழிவிடைதாங்கி பைரவபுரம்’ என்றும் சொல்ல்வார்கள்.

வெம்பாக்கம் தாலுக்கா

அழிவிடைதாங்கி கிராமம்

திருவண்ணாமலை
மாவட்டம்.

Friday, December 29, 2023

ரங்கநாத பெருமாள் கோவில் - திருக்கோவிலூர் தல வரலாறு

 ரங்கநாத பெருமாள் கோவில் - திருக்கோவிலூர்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணையாற்றின் தென்கரையில் ஆதிதிருவரங்கம் என்ற ஊர் உள்ளது.

இங்கு ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் வகையில் உள்ள இந்த கோவில் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது. இது சோழர் காலத்தில் கட்டப்பட்டது.

புராண வரலாறு

சோமுகன் எனும் அசுரன் யாகத்தின் மூலம் தேவர்களை வெல்ல வேண்டுமென எண்ணினான். அதன்படி யாகத்தின் மூலம் பிரம்மாவிடம் இருந்து ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய 4 வேதங்களையும் கைப்பற்றி, எதிர்மறை செயல்களில் ஈடுபட்டான்.

இதற்கிடையில் வேதங்களை கைப்பற்றிய சோமுகன் எருமை கிடா உருவத்துக்கு மாறி விட, அவனை அழிப்பதற்காக தேவர்களும், முனிவர்களும் 10 கரங்கள் கொண்ட மகிஷாசுரமர்த்தினி என்னும் தேவதையை உருவாக்கினார்கள்.

மகிஷாசுரமர்த்தினி சோமுகனிடம் போரிடும் போது, அவன் எருமை உருவத்தில் இருந்து மாறி கடலில் சென்று பதுங்கி விட்டான்.

வேதங்கள் அவனிடம் இருந்ததால் உலகம் செயல்படாமல் இருளில் மூழ்கியது. இதனால் மிகுந்த கவலை அடைந்த தேவர்களும், முனிவர்களும், பிரம்மாவுடன் திருப்பாற்கடல் சென்று பெருமாளை பிரார்த்தனை செய்து வேதத்தை மீட்டுத் தருமாறு வேண்டினர்.

தேவர்கள், முனிவர்களின் வேண்டுகோளை ஏற்ற பெருமாள் மச்சஅவதாரம் (மீன் அவதாரம்) எடுத்து கடலில் ஒளிந்திருந்த சோமுகன் எனும் அசுரனை போரிட்டு வதம் செய்து, வேதங்களை மீட்டு பூவுலகிற்கு கொண்டு வந்தார்.

அவ்வாறு வேதங்களை பூவுலகிற்கு பெருமாள் கொண்டு வந்த இடம்தான் ஆதிதிருவரங்கம் ஆகும். இங்குதான் பிரம்மாவுக்கு பெருமாள் வேதங்களை உபதேசித்தார் என்று புராண வரலாறும் கூறுகிறது.

இக்கோவிலில் உள்ள மூலவர் கற்சிலைகளால் ஆனதில்லை. சுண்ணாம்பு, மூலிகை உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் (சுதை) வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆதிசேஷன் என்று அழைக்கப்படும் 5 தலைகள் கொண்ட நாகப்பாம்பின் சரீரத்தினால் ஆன படுக்கையின் மீது பெருமாள் பள்ளி கொண்டு இருப்பதுபோல் மூலவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாகப்பாம்பு படம் எடுத்து குடையாக பிடிக்க அதில் பெருமாள் புன்முறுவலுடன் கிழக்கு திசையை பார்த்தபடி ஸ்ரீதேவியின் மடியின் மீது படுத்துள்ளார்.

பெருமாளின் இடது கால் பூமாதேவியின் மடி மீதும், வலது கால் பாம்பின் வால் சுழன்று அதன் மீது உள்ளது.

வலது கையை சிரசின் பக்கம் வைத்து அபயமுத்திரையுடன் காட்சி அளித்து வருகிறார். வலது கையை கருடாழ்வார் உட்கார்ந்து தாங்கி கொள்கிறார்.

இடது கையால் பெருமாள் பிரம்ம தேவருக்கு 4 வேதங்களையும் உபதேசம் செய்கிறார். சுதையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதால் அதற்கு அபிஷேகம் செய்வதில்லை. மாறாக உற்சவருக்கு அனைத்து பூஜைகளும் செய்யப்பட்டு வருகிறது.

தல வரலாறு

கிருதாயுகத்தில் சுரதகீர்த்தி என்ற தொண்டை மன்னன் இருந்தான். அவனுக்கு எல்லா செல்வங்களும் இருந்தும், புத்திர பாக்கியம் இல்லை.

மனம் வருந்திய அந்த மன்னன் நாரத முனிவர் அறிவுரைப்படி மனைவியுடன் இக்கோவிலுக்கு வந்து மனம் உருகி வேண்டினான்.

இவர்களது வேண்டுகோளை ஏற்ற பெருமாள் அவர்களுக்கு ஆசி வழங்கி, புத்திர பாக்கியம் கிடைக்க செய்தார். அதன்படி அவர்களுக்கு 4 மகன்கள் பிறந்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இக்கோவிலை ஆழ்வார்கள் யாரும் மங்களாசாசனம் செய்யவில்லை என்று கருத்து நிலவி வருகிறது. இருப்பினும் பெரியாழ்வார் தன்னுடைய பாசுரத்தில் இக்கோவில் பற்றி பாடியதாக குறிப்பிடுகிறார்கள்.

அதில், பெருமாள் பிரம்மாவுக்கு வேதங்களை கற்றுக்கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோவிலை பற்றியது தான் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்க பெறவில்லை என்றும் கூறுகிறார்கள்.

தலங்களை 3 பிரிவாக பிரிக்கிறார்கள். அதன்படி புராண, அபிமானிய, திவ்ய தலங்கள் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவில் புராண காலத்திலேயே உள்ளதால் 108 திவ்ய தலங்களில் இக்கோவில் இடம் பெறவில்லை என்ற தகவலையும் ஆராய்ச் சியாளர்கள் தலவரலாறாக கூறுகின்றனர்.

தீர்த்தம்

சந்திரன் தனது மனைவிகளின் சாபத்தினால் அழகு குறைந்து ஒளி மங்கி பொலிவு இழந்து வருந்தினான்.

பின்னர் தேவர்களின் அறிவுரையின் படி இக்கோவிலுக்கு வந்த சந்திரன், பெருமாளை வேண்டி தனது குறைகள் நீங்கப் பெற்றான்.

சந்திரன் இக்கோவிலுக்கு தென் கிழக்கில் உள்ள கிணற்றில் நீராடி தவம் செய்ததால் இந்த தீர்த்தத்துக்கு சந்திரபுஷ்கரணி என்ற பெயர் உருவானது.

பல்வேறு சிறப்புகளை வாய்ந்த இக்கோவிலில் கிருஷ்ணருக்கு தனி சன்னிதி, பெருமாள், தாயார் சன்னதி, வரதராஜபெருமாள் சன்னதி, நவராத்திரி மண்டபம், விஷ்வக்சேனர் சன்னிதி, ஸ்ரீவேதாந்த தேசிகர் சன்னிதி, ஆண்டாள் சன்னிதி, ஊஞ்சல் மண்டபம், வாகன மண்டபம் அமைந்துள்ளது.

கோவிலுக்கு அருகில் சிறிய ஆஞ்சநேயர் சன்னி தியும் உள்ளது. மூலவரின் பாதத்துக்கு நேராக வெளிபுறத்தில் பெருமாள் திருவடி உள்ளது.

இந்த திருவடியை தொட்டு வணங்கினால் மூலவர் திருபாதத்தை வணங்கும் பலன் கிட்டும் என்பதால் பக்தர்கள் இந்த திருவடியை வணங்கி செல்கிறார்கள். இக்கோவில் தல விருட்சம் புன்னை மரம்.

பெரிய பெருமாள்

பெருமாளின் அவதாரங்களில் முதல் அவதாரம் மச்ச அவதாரம், முதல் யுகம் கிருதாயுகம் என்பதால் இவர் ‘பெரிய பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார்.

ஆதியிலே தோன்றியதால் தமிழ்நாட்டில் உள்ள வைணவ தலங்களில் முதன்மையானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சப்த ஸ்வரங்கள்

இக்கோவிலில் ராமருக்கு தனி சன்னிதி உள்ளது. திருவடிக்கு அருகில் உள்ள ராமர் சிலையை தட்டினால் 7 ஸ்வரங்களும் வெளிப்படுகிறது. இதனால் இக்கோவில் சப்த ஸ்வரங் களுக்கு உரிய கோவிலாக கருதப் படுகிறது.

கல்வி தலம்

ரெங்கநாதர் எனும் பெருமாள் பிரம்மாவுக்கு 4 வேதங்களையும் (ரிக், யஜூர், சாம, அதர்வண) சொல்லி கொடுத்த இடம் ஆதிதிருவரங்கம் என்பதால் இக்கோவில் கல்வி தலமாகவும் விளங்கி வருகிறது.

இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தால் கல்வி செல்வம் கிடைக்கும். குழந்தை பாக்கியம், திருமணம் ஆகாதவர்களும், வேலைவாய்ப்பு கிடைக்காதவர்களும் இங்கு வந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

பன்னீர்புஷ்ப மரம்

கோவிலுக்குள் மருத்துவ குணம் கொண்ட பன்னீர்புஷ்ப மரம் உள்ளது. இந்த மரம் பகலில் பூக்காது. மாலை 6 மணிக்கு பிறகு பூக்கும்.

இந்த பூக்களை பறித்து பெருமாளுக்கு இரவு நேர பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. இது தவிர கோவிலுக்குள் மகிழம் பூ மரமும் உள்ளது.

இக்கோவிலில் பெருமாளை தினந்தோறும் காலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தரிசனம் செய்யலாம்.

மேலும் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ணஜெயந்தி, ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம், நவராத்திரி போன்ற திருவிழாக்கள் இங்கு நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.

மணலூர்பேட்டையில் இருந்து ஆதிதிருவரங்கத்துக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 45 நிமிட பயணத்தில் ஆதிதிருவரங்கம் சென்று, சற்று தொலைவில் நடந்து சென்றால் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள இக்கோவிலை சென்றடையலாம்

Thursday, December 28, 2023

ஸ்ரீபாபநாசநாதர் கோவில் 🛕தினம் ஒரு திருக்கோயில்:🔔🛕 கோபுர தரிசனம் கோடி புண்ணியம். 🪔

 🪷🪷🪷 ஸ்ரீபாபநாசநாதர் கோவில்🪷🪷🪷




🪷 மூலவர்:
     
    🙏பாவவிநாசநாதர்.

 🪷 தாயார்:
     
    🙏உலகம்மை.

🪷 விருட்சம்:
     
    🙏முக்கிளா மரம்.

🪷 தீர்த்தங்கள்:
     
    🙏தாமிரபரணி
     
    🙏வேத தீர்த்தம்
     
    🙏பைரவ தீர்த்தம்,
     
    🙏கல்யாண தீர்த்தம்.

🪷 மாவட்டம்:
     
    🙏திருநெல்வேலி

🪷 ஊர்:
     
    🙏பாபநாசம்

 தல வரலாறு:

🪷இந்து சமயப் புராண வரலாற்றின்படி, இறைவன் சிவனுக்கும் பார்வதிக்கும் கயிலை மலையில் நடந்த திருமணத்தை அகத்தியர் காண முடியாமல் போனது.

🪷 அகத்தியரின் இறைவனின் திருமணக் கோலத்தைக் காண விரும்பி இறைவனை வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அகத்தியருக்கும் லோபமுத்திரைக்கும் இத்தலத்தில் இறைவன் தன் இறைவியுடன் திருமணக் கோலத்தில் காட்சியளித்தார்.

🪷 இக்கோயிலுக்கு அருகிலுள்ள அருவி அகத்தியர் அருவி என அழைக்கப்படுகிறது.

🪷மற்றொரு மரபு வரலாற்றில், உரோசம முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டு அம்மலர்கள் கரைசேர்ந்த இவ்விடங்களில் சிவாலயங்கள் அமைந்து சிவனை வழிபட்டதாகவும், அவற்றில் முதலாவது மலர் கரைசேர்ந்த பாபநாசத்தில் அமைத்த கோயில் பாபநாசநாதர் கோயிலெனக் கூறப்பட்டுள்ளது.

🪷 இக்கோயில் சிவவடிவான இலிங்கமானது நவகோள்களில் ஒன்றான சூரிய தேவனின் அம்சமாக கருதப்படுகிறது. கைலாயநாதரை முதன்மைக் கடவுளாகக் கொண்டு நவகோள்களுக்குரியவையாக தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நவகைலாய கோயில்களின் வரிசையில் முதலாவதான இக்கோயில் சூரியனுக்குரியதாகும்


 முகவரி:

🪷அருள்மிகு பாபநாசர் சுவாமி திருக்கோவில்,
அம்பாசமுத்திரம் வட்டம்,பாபநாசம்,
திருநெல்வேலி மாவட்டம்.
தொலைபேசி-04634-293757

    🕉 சிவாய நமஹ🙏


சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை

 சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு… . ராவணன் ஆண்டு வந்த இலங்கைக்கு சிவபெருமானை அழைத...