🙏இன்றைய கோபுர தரிசனம்🙏🕉
திங்கட்கிழமை
12.02.2024
🕉அருள்மிகு பிராணேஸ்வரி, பிராணாம்பிகை தாயார் உடனுறை தர்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர் திருக்கோவில்🕉
🔆திருநள்ளாறு,
காரைக்கால் மாவட்டம்,
புதுச்சேரி மாநிலம்
🔆எப்போதும் மனிதர்கள் தாங்கள் கஷ்டப்படும் காலங்களில் இறைவனை வழிபட்டு தங்களின் குறைகளை கூறி வழிபடுவர், ஆனால் தனது சக்தி மிகுந்த தாக்கத்தால் தெய்வங்களையே ஆட்டிப்படைத்தவர், நவகிரகங்களில் ஒரு மனிதனுக்கு ஆயுளை நிர்ணயிப்பவராகவும், எமனுக்கு சகோதரனும், காகத்தை வாகனமாக கொண்டவரான சனிபகவான்
🔆இந்த சனி பகவான் சனீஸ்வர பட்டதோடு வீற்றிருக்கும் “திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர்” கோவில், சுமார் 3000 ஆண்டுகளுக்குமேல் பழமையான கோவிலான இந்த ஆலயத்தின் இறைவனான சிவ பெருமான் தர்பாரண்யேஸ்வரர் என்றும் இறைவி பிராணேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்கள்
🔆இந்த கோவிலின் சிவபெருமான் தர்பை புல்லிலிருந்து தோன்றியதால் இவருக்கு “தர்பாரண்யேஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது, நெடுங்காலத்திற்கு முன்பு வாழ்ந்த நளன் எனும் அரசன் தமயந்தி என்னும் பேரழகு வாய்ந்த இளவரசியை மனைவியாக அடைந்ததை பொறுக்க முடியாத தேவர்கள், சனீஸ்வர பகவானிடம் சென்று நளனை பிடித்து தகுந்த பாடம் கற்று கொடுக்குமாறு கூறினார்
🔆 சனீஸ்வர பகவானும் நளனை ஏழரை நாட்டு சனியாக பிடித்து கொண்டார், இதனால் அரசனாக இருந்த நளன் தனது மனைவி தமயந்தி மற்றும் குழந்தைகளை பிரிந்ததுடன் தனது நாடு, ராஜ்ஜியம் என அனைத்தையும் இழந்து ஏழரை ஆண்டு காலம் மிகுந்த துன்பங்களை அனுபவித்தான்
🔆ஏழரை ஆண்டுகள் கழித்து இந்த திருநள்ளாறு கோவிலுக்கு வந்த நளன், இக்கோவில் குளத்தில் நீராடி இங்கு வீற்றிருக்கும் சனி பகவானை வழிபட்ட பின் தான் முன்பு இழந்த தனது குடும்பம், நாடு , ராஜ்ஜியம் என அனைத்தையும் திரும்ப பெற்று இன்பமாக வாழ்ந்தான், நளன் நீராடிய தீர்த்தம் இன்றும் “நள தீர்த்தம்” என அழைக்கப்படுகிறது
🔆ஏழாம் நூற்றாண்டில் சமண மதத்தினரின் ஆதிக்கம் அதிகமிருந்த போது “திருஞானசம்பந்தர்” சைவ மதமே உண்மையானது என்று நிரூபிக்க இந்த கோவிலின் இறைவனான தர்பாரண்யேஸ்வரரை போற்றி இயற்றிய பதிகம் கொண்ட ஓலை சுவடிகளை தீயிலிட்ட போது அந்த ஓலைச்சுவடிகள் எரியாமல் அப்படியே இருந்ததால்!, அதை “பச்சை பதிகம்” என அழைத்தனர்
🔆 இதன் மூலம் சைவ மதம் உண்மையானது என நிரூபித்தார் திருஞானசம்பந்தர், தமிழகத்தில் மீண்டும் சைவம் தழைக்க ஆரம்பித்தது, இக்கோவிலின் சிறப்பே இங்கு நவகிரக நாயகர்களின் வலிமை வாய்ந்தவரும், ஆயுள்காரகனும் ஆன “சனி பகவானுக்கு” விஷேஷ சந்நிதி இருப்பதும், அவருக்கு ஆகம விதிப்படி பூஜைகளும் செய்யப்படுவதும் தான்
🔆 இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு தனது குறை நீங்க பெற்ற சனிபகவான் சனி என்ற பெயரோடு ஈஸ்வர பட்டத்தையும் சேர்த்து சனீஸ்வரன் என அழைக்கப்படுகிறார், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது பல லட்சக்கணக்கான பக்தர்கள் சனி பகவானை வழிபடுகின்றனர்
🔆 ஜாதகத்தில் “ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, மங்கு சனி” ஆகிய கெடுதலான சனி பகவானின் கோட்சாரம் பெறுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து எண்ணெய் தேய்த்து “நள தீர்த்தத்தில்” நீராடி சிவ பெருமானையும், சனீஸ்வரரையும் வழிபட சனி பகவானால் தீமையான பலன்கள் ஏற்படாமல் நன்மைகள் நடக்க தொடங்கும்🙏🕉
No comments:
Post a Comment