சிவாயநம திருச்சிற்றம்பலம்.
நால்வர்கள் சென்ற நால்வழிப்பாதை.
நம் சைவசமயம் தமிழ்மொழி தமிழ்மறை பன்னிரு திருமுறை என்றாலே முக்கிய இடத்தில் முன் நிற்பவர்கள் நம் போற்றுதலுக்குரிய நால்வர் பெருமக்கள் ஆவர்.இவர்கள் நால்வர்களும் நான்கு வழியான பாதையில் பயணித்து தாங்கள் விரும்பியதை அடைந்தவர்கள்.
இதில் ஒவ்வொருவர் சிந்தனையும் தேடலும் வெவ்வேறு விதமாக அமைந்துள்ளது. இதை நாம் சற்று ஆராய்ந்து பார்த்தால் எந்த பாதை எளிமையானது.எந்த பாதை சரியானது என்பதை அறிந்து நமக்கு பிடித்த எந்த பாதையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து பயணிக்கலாம்.தவறு ஒன்றுமில்லை. ஆனால் எந்த பாதையையுமே சரியாக அறியாமல் எல்லா பாதைகளிலும் கலந்து பயணித்தால் நாம் சேரவேண்டிய இடத்தை அடைய பல பிறவிகள் எடுக்கவேண்டிய வரும்.அப்போதும் இலக்கை அடைய முடியுமா என்பது சந்தேகம்தான்.
நால்வரில் முதல்வர் திருஞானசம்பந்த பெருமான்.இவர் மூன்றரை வயதிலேயே உமையவள் திருக்கரங்களால் காமதேனுவின் பாலிலே தமிழ் எனும் ஞானத்தேன் கலந்த ஞானப்பால் கலந்து சுவைத்து தமிழ் ஞானம் பெற்று அன்னைத்தமிழில் இறைவனுக்கு தமிழ்மாலை சூட்ட ஆரம்பித்தார்.இறைவன் உமையவள் தமிழன்னை மூவரின் அருள்பெற்று பின்னர் இறைவழியில் பயணிக்க ஆரம்பித்தவர்.
திருஞான சம்பந்தர் சூட்டிய தமிழ்மாலையை திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம் யாழிசையால் பண்ணிசைக்க ஐயனின் இல்லத்தரசி மதங்கசூளாமணி அம்மை தம் தேன்குரலால் பண்ணிசை பாமாலையாக சூட்டி அழகு பார்த்தனர்.இந்த மூவர் கூட்டணி மூன்று திருமுறைகளை சைவர்களுக்கு பண்ணிசைப்பாமாலையாக வழங்கியது. மதங்கசூளாமணி அன்னை மழலையாக இருந்த திருஞானசம்பந்த பெருமானை தன் மார்பிலும் தோளிலும் ஆலயம் ஆலயமாக தூக்கிச்சுமந்தார். சம்பந்தபெருமான் சற்று பெரியவராக ஆனபோதும் சுமக்க முடியாமல் தூக்கி சுமப்பதை கண்ட இறைவன் தம் பூதகணங்களுக்கு அறிவுறுத்தி முத்து பல்லக்கை தந்து திருஞானசம்பந்த பெருமானை அடியார் பெருமக்கள் சுமக்க அதில் பயணிக்கும்படி செய்தார்.இந்த விடயம் யாவரும் வெளியில் சொல்லாதது அடியேனுக்கு சற்று வருத்தம்.
சம்பந்தபெருமான் தமிழ்மாலை தமிழ்மாலை என முன்னிருத்தினாலும் அதில் வைதீக வாடையும் வானுலக சொர்கமுமே முன்னிலை வகிக்கிறது. உதாரணத்திற்கு ஏராளமான ஆதாரம் இருப்பினும் ஒன்றிரண்டை சான்றுகளாக முன்வைக்கிறேன்.
முதல் சான்று நமச்சிவாய பதிகத்தில் தமிழ்மறையை முன் வைக்கவேண்டிய இடத்தில் வேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே என்றார்.இங்கே தமிழ்மறைக்கு எதிரான இன்று கருவறையில் இருந்து தமிழையே வெளியேற்றிய குடமுழுக்கில் இருந்தும் தமிழை வெளியேற்றிய அந்த வேதத்திற்கு ஒப்புதல் வழங்கி உயர்திகாட்டியுள்ளார்.
பதிகத்திற்கு பதிகம் தமிழை வளர்க்கின்றேன் என பதிவும் செய்துள்ளார்.
அடுத்து கோளறு திருப்பதிகத்தின் நிறைவு பாடலில் வானில் அரசாள்வர் ஆணை நமதே என நிறைவு செய்திருப்பார்.இது மண்ணில் உள்ள திருக்கயிலை சிவபுரத்தை ஐயன் அறியவில்லையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
காரணம் பெருமான் இறைமுத்தி அடையும் அந்த நிகழ்வே அதற்கு சான்றாக அமைந்துள்ளது. இறைமுத்தியின் போது வானில் இருந்து வந்த அக்னி படிக்கட்டுகளில் ஏறி விண்ணுலகம் சென்றதாக நமக்கு அந்த நிகழ்வு காட்டுகிறது. பெருமான் சிவபுரத்தில் ஈசன் திருவடிக்கீழ் இருப்பாரா அல்லது விண்ணோர்கள் ஏத்த சொர்கலோகத்தில் வீற்றிருப்பாரா முடிவை அடியார்கள் விருப்பத்திற்கே விட்டு விடுகின்றேன். இறைவன் திருவடியை பெருமானின் உயிர் சேர்ந்து பிறவாமையை அடைய வேண்டுதலை முன்வைக்கிறேன். இந்த பாதை திருஞானசம்பந்த பெருமான் சென்ற பாதை. நாளை திருநாவுக்கரசு பெருமான் சென்ற பாதையை சிந்திப்போம்
Friday, January 26, 2024
நால்வர்கள் சென்ற நால்வழிப்பாதை.
Subscribe to:
Post Comments (Atom)
சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை
சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு… . ராவணன் ஆண்டு வந்த இலங்கைக்கு சிவபெருமானை அழைத...

-
🌻மேல்மலையனூர் அங்காளம்மன்கோவில்🌻 1. கணவனை பிரிந்து வாழும் பெண்கள் மேல்மலையனூரில் வழிபட உரிய பலன் கிடைக்கும். 2. சில பெண்களை கணவன் அடிக...
-
🙏இன்றைய கோபுர தரிசனம்🙏🕉 திங்கட்கிழமை 12.02.2024 🕉அருள்மிகு பிராணேஸ்வரி, பிராணாம்பிகை தாயார் உடனுறை தர்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வ...
-
சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு… . ராவணன் ஆண்டு வந்த இலங்கைக்கு சிவபெருமானை அழைத...
No comments:
Post a Comment