ஸ்ரீ_பைரவர்_அருட்கடாட்சம் #பெற_தேய்பிறை_அஷ்டமி #விரத_வழிபாடும்
☘☘☘☘☘☘☘☘
தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிட்டும். பஞ்சதீபம் என்பது இலுப்பைஎண்ணை, விளக்குஎண்ணை, தேங்காய்எண்ணணை, நல்லெண்ணை, பசுநெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.
☘
ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.
☘
வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போட்டு வணங்குவது சிறப்பு.
☘
தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிகப்பு நிற ஆடை அணிந்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, சிகப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசனியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.
☘☘☘☘☘☘☘☘
வியாழகிழமை ராகு கால நேரம் 1.30 to 3 மணி வரைக்கும்.
No comments:
Post a Comment