ஓம் நமோ நாராயணாய 🙏
🌹🌺" தவறு என்பதை உணர்ந்த லட்சுமணன், மன்னிப்பு வேண்டி பெருமாளிடம் அடிபணிந்து நின்ற கோயில்........ பற்றி - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹கேரளாவின் பிரசித்தி பெற்ற பாரதப்புழா நதிக்கரையில் இந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இத்தலம் ஒரு காலத்தில் பெரிய கலாக்ஷேத்திரமாக விளங்கியிருக்கிறது.
🌺"ஸ்ரீஸுஸீக்தி' இங்கு அருளப்பட்டதால் பல வகையான நூல்கள் இங்கு ஆராயப்பட்டன. இதனால் கற்றறிந்த பெரியோர்கள் குழுமியிருந்த கல்வி மாநகரமாகவும், கலை நகரமாகவும் இத்தலம் சிறப்புற்றிருந்தது.
🌺ஸ்ரீ ராமன் வனவாசம் செல்லும்போது சித்திர கூடத்தில் தங்க நேரிட்டது. அப்போது அயோத்திக்கே ராமனை மீண்டும் அழைத்து செல்ல பரதன் அங்கு வந்தான்.
🌺இதைக்கண்ட லட்சுமணன், ராமனுடன் போர் செய்யவே பரதன் வருவதாக நினைத்து, அவனை கொல்ல முயற்சிக்கிறான் .
🌺இது தவறு என்பதை உணர்ந்த லட்சுமணன், தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்து பெருமாளிடம் அடிபணிந்து நின்றதாகவும், அப்போது பரதனே வந்து லட்சுமணனை ஆரத்தழுவி இன்சொல் கூறியதாகவும், இதனால் இத்தலம் "திருமொழிக்களம்' ஆனதாகவும் கூறுவர்.
🌺அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது
புராண பெயர் : திருமூழிக்களம்
மாவட்டம் : எர்ணாகுளம்
மாநிலம் : கேரளா
🌺பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 62 வது திவ்ய தேசம்.லட்சுமணனும் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். இத்தலத்திற்கு கோபுரம், மண்டபம் போன்றவற்றை லட்சுமணன் கட்டி பல திருப்பணிகள் செய்துள்ளான்.
🌺🌹 வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க 🌷🌹
-------------------------------------------------
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் *